நிந்தவூர் பிரதேச சபையின் புதிய முதலாவது சபை கூட்ட அமர்வு நடவடிக்கைகள் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அமர்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) ஆரம்பித்து வைத்தார்.
பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் உப தவிசாளர் சட்டத்தரணி எம் .ஐ .இர்பான் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றலுடன் ஆரம்பமாகின.
இதன்போது மத அனுஷ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் மற்றும் உரை என்பன தொடர்ச்சியாக
இடம்பெற்றன.
பின்னர் ஆலோசனை குழுக்கள் நியமித்தல், நிதி மற்றும் கொள்கை உருவாக்க குழு, வீடமைப்பு சமூக அபிவிருத்திக் குழு, தொழில்நுட்ப சேவைக் குழு ,சுற்றாடல் வாழ் வசதி, செலவினம் தொடர்பாக நிதிப்பிரமாணம் அதிகாரம் அளித்தல்,கொடுப்பனவு அங்கீகாரம் அளித்தல், காசோலையில் கையொப்பமிடும் உத்தியோகத்தர்களை தெரிவு செய்தல், மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்டுள்ள PSDG,CBG, AIP வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், செலவு தொடர்பாக தவிசாளரினால் நேரடியாக அனுமதி வழங்கும் உச்ச எல்லை தொடர்பாகவும், பெறுகை நடைமுறை குழுக்கள் தாபித்தல்,பெறுகைக் குழு,விலை மதிப்பீட்டுக் குழு,ஏற்றுக் கொள்ளும் குழு,தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்டன.
மேலும் சபையில் வரவுத் செலவு திட்டம் 2025 தொடர்பாகவும் பிரதேச சபையின் PE 8362 வாகனம் மற்றும் ஏனைய வாகனங்களின் திருத்துதல் குறித்தும் LDSP திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட Cooling center, வெளவால் ஓடை பீச் பார்க் மற்றும் விளம்பரப் பலகைகளை வாடகைக்கு விடுதல் சம்பந்தமாகவும், சபைக்குரிய மனுக்கள் கடிதங்கள் முறைப்பாடுகள் பரிசீலித்தல், பாதையினை செப்பனிடல்,வடிகான் மூடியிடல்,LED Bulb பொருத்துதல், கடற்கரை அமைந்துள்ள பெரிய மின் விளக்கு தொகுதிகள் நான்கினை பழுது பார்த்தல், குறித்தும் ஆராயப்பட்டன.
இறுதியாக தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களிற்கான கொடுப்பனவுகள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்களின் மேலதிக நேர கொடுப்பனவு, ஓய்வுநாள் கொடுப்பனவு, இடர்கடன் கொடுப்பனவு சம்பந்தமான தீர்மானம் ,மாதாந்தக் கூட்டம் நடத்த வேண்டிய திகதி தீர்மானித்தல், முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
-பாறுக் ஷிஹான்