அரசியல்உள்நாடு

தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் கடமை – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

தவறுகள் இருக்குமானால் ஊடகங்கள் அதனை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.

மாறாக நிலைமையை அறியாமல் ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒரு சிறந்த ஊடகவியலாளருக்கு பொறுத்தமில்லை என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கம்பஹா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த ஊடக கருத்தரங்கு 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு போரத்தொட்ட அல் பலாஹ் கல்லூரியில் இடம்பெற்றது.

இதில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவிதார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

21ஆம் நூற்றாண்டில் ஊடகம் சமூகத்திலும் நாட்டின் ஆட்சியின் போக்கில் தாக்கத்தை செலுத்துகின்ற முக்கிய துறையாகும்.

ஒரு சந்தர்ப்பத்தில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட் கூறுகையில், 19ஆம் நூற்றாண்டில் கப்பல் வசம் யாரின் கைகளில் இருக்குமோ அவர்கள் நாட்டை ஆள்வார்கள். 20ஆம் நூற்றாண்டில் யார் வான்படையை கையில் வைத்திருக்கிறார்களோ அவர்கள் உலகை ஆள்வார்கள்.

அதேபோன்று 21ஆம் நூற்றாண்டில் யார்வசம் ஊடகம் இருக்கிறதோ அவர்கள் நாட்டை ஆள்வார்கள் என தெரிவித்திருந்தார். தற்போது அதுவே இடம்பெறுகிறது.

அதனால் சிறந்த ஊடகவியலாளர்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பாரியதொரு பங்களிப்பை செய்ய முடியும். சமூகம் சார்ந்த பல பிரச்சினைகள் எமது நாட்டில் இருக்கின்றன.

அதனை வெளியில் கொண்டுவரும் பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கே இருக்கின்றன. அதனால் ஊடகவியலாளர்கள் குப்பைகளை தேடக்கூடியவர்களாக இல்லாமல் சத்தியத்தை தேடிச்சென்று அதனை மக்கள் மயமாக்கும் ஊடகவியலாளர்களாக இருக்க வேண்டும்.

ஒருசில ஊடகங்கள் குப்பைகளை கழறிக்கொண்டு, அதில் இன்பம் கண்டுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றன. இதனால் அந்த சமூகம் பாதிக்கப்படுகின்றன.

போலி செய்திகள் மூலம் சமூகத்தை பிழையான வழிக்கு கொண்டுசெல்லலாம். பிழையான ஊடக செய்திகளால் ஒரு சமூகமாக நாங்கள் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

அதனால் ஊடகத்துறையில் இருப்பவர்கள் தனிப்பட்ட விடயங்களை மறந்து, நடுநிலையாக இருந்து செயற்படக்கூடியவராக இருந்தால், அவருக்கும் சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கும்.

எங்களின் தவறுகள் இருக்குமானால் ஊடகங்கள் அதனை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம் எங்களுக்கு எமது தவறை திருத்திக்கொள்ள முடியும்.

மாறாக நிலைமையை அறியாமல் ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒரு சிறந்த ஊடகவியலாளருக்கு அலகல்ல. உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால், அது எந்தளவு உண்மை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என எமது மார்க்கம் சொல்லித்தருகிறது.

அதனால் ஊடகவியலாளர்கள் எப்போதும் சமூகத்தை நல்வழிப்படுத்தக்கூடிய விடயங்களை பரப்பவேண்டும தவிர சமூகத்தில் பிளவை, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை பரப்ப மாட்டார்கள்.

எனது அமைச்சான தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். இன ஐக்கியத்தை ஊடகங்கள் மூலமே ஏற்படுத்தலாம்.

ஒரு நாட்டின் ஆட்சியை சிறப்பாக முன்னெடுத்துச்செல்லவும் ஆட்சியின் பாேக்கில் மாற்றத்தை ஏற்படுத்தவும் ஊடங்களுக்கு முடியும். அதனால் ஊடகவியலாளர்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது.

அதனால் ஊடக கல்வியை கற்கும் மாணவர்கள் அதனை உணர்ந்து, ஊடக தர்மத்தை பேணி செயற்பட பழகிக்கொள்ள வேண்டும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல் – நால்வர் மாயம்

editor

உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு

editor