உள்நாடு

தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு – கொழும்பு பெரிய பள்ளிவாயலின் அறிவிப்பு

ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (09) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கின்றது.

இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

நாட்டின் எப்பிரதேசத்திலாவது ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய தகவல்

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor