உள்நாடுபிராந்தியம்

தலாவாக்கலை பகுதியில் விபத்தில் சிக்கிய கார்

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று (14) மாலை 5 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை, லிந்துல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த காரை சட்டத்தரணி ஒருவர் செலுத்திச்சென்றுள்ள நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கார் மண்மேட்டில் மோதியதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சட்டத்தரணிக்கு காயம் ஏற்படவில்லை. எனினும், விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும், சாரதியின் கவனக் குறைவே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இரு மையவாடிகளில் ஜனாஸாக்களை அடக்கலாம் [VIDEO]

நீரில் மூழ்கி ஒருவர் பலி – அநுராதபுரத்தில் சோகம்

editor

மக்கள் அலட்சியமாக இருந்தால் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறையாகும்