உள்நாடு

தலவாக்கலையில் 4 சிறுவர்களை காணவில்லை

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக  தலவாக்கலை பொலிஸில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), சிறுவன் ராஜகுரு கோபிசாகர் (வயது 15) ஆகியோர் கடந்த (14)  ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை  என அவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு ஒன்று நேற்று (15) திங்கட்கிழமை தலவாக்கலை பொலிஸில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் உட்பட சிறுமிகள் தமது பெற்றோர்களுக்கு சொல்லாமல்  வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0764612289, 0771546724 தொடர்புகொள்ளுமாறு பெற்றோர்கள் உதவி கோரியுள்ளனர்.

Related posts

நட்புறவு கிரிக்கெட் கிண்ணம் சம்மாந்துறை பிரதேச சபை வசம்.!

editor

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 178 மாணவர்கள்

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் சாத்தியம்