உள்நாடு

தனியார் பஸ்கள் போக்குவரத்திலிருந்து விலகல்

(UTV | கொழும்பு) – சிபெட்கோ நிறுவனமானது நேற்று (18) நள்ளிரவிலிருந்து எரிபொருள்களின் விலையை அதிகரித்துள்ளதால், எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

எனவே, உடனடியாக பஸ் கட்டணங்கள் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இதற்காக ஒரு நாளேனும் காலக்கெடு வழங்கப்படாது என்றார்.

தற்போது 90 சதவீதமான தனியார் பஸ்கள் போக்குவரத்திலிருந்து விலகியிருப்பதாகவும் இந்த நிலையில், உடனடியாக பஸ் கட்டணங்களை திருத்தாவிடின், இன்று பகலுடன் தனியார் பஸ் சேவைகள் போக்குவரத்திலிருந்து விலகும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related posts

பரிசு பொருட்கள் வழங்க முடியாது; திரும்பி சென்ற முன்னாள் ஜனாதிபதி

ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

editor

யாழில் 60போலி சாரதி அனுமதிப்பத்திரம் : சிக்கிக்கொள்ளும் நபர்!