உள்நாடுபிராந்தியம்

தற்கொலை செய்யப்போவதாக மனைவியை மிரட்டிய நபர் பலி – விளையாட்டு வினையானது

தற்கொலை செய்யப்பதாவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேந்தன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த எட்டாம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கதிரையில் அமர்ந்திருந்து கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்பதற்காக மனைவியுடன் தொலைபேசியில் உரையாடினார்.

கைபேசியில் உரையாடியவாறே மதுபோதையில் உறங்கியுள்ளார். பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தவேளை அவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார்.

Related posts

ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

திலினி பிரியமாலி சிறைச்சாலை நீதிமன்றுக்கு

அரசாங்கம் பாட்டனாரிடம் ஆலோசனை பெறவேண்டும் – ரணில்

editor