வகைப்படுத்தப்படாத

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள்

(UDHAYAM, COLOMBO) – இவ்வாண்டுக்குரிய தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையின் அனுமதி அட்டைகளை  அதிபர்மாருக்கு தபால் மூலம் அனுப்பும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையிருந்தால் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை ஒழுங்கமைப்புப் பிரிவிற்கு அறிவிக்க வேண்டும்.

இவ்வாண்டிற்குரிய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. இம்முறை 3 லட்சத்து 56 ஆயிரத்திற்கு மேற்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதுவார்கள். மொத்தமாக 493 ஒருங்கிணைப்பு நிலையங்களின் கீழ் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறும்.

 

Related posts

திருகோணமலையில் 7 மீனவர்கள் கைது

ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு

Dr. Shafi produced before Court