அரசியல்உள்நாடு

தயாசிறி ஜயசேகரவின் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (23) பாராளுமன்றத்தி்ல் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் தலைவராக பிரதிக் குழுக்களின் தலைவர் ஹேமலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.

Related posts

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து புதிய செயலியை அறிமுகப்படுத்திய பொலிஸ்

editor

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை [VIDEO]

வாய்க்காலில் சிக்கி பாடசாலை மாணவன் பலி