உள்நாடுவணிகம்

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய நடவடிக்கைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று நிலைமை காரணமாக கடந்த 26 ஆம் திகதி மூடப்பட்ட தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று (05) மீள திறக்கப்பட்டது.

அதிகாலை 05 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரம் பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படவுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இன்றும் (05) நாளையும் (06) மாத்தளை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மாத்திரம் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Related posts

மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்கும் பிரியாந்தினி?

Nazu டிராவல்ஸ் – ரமழான் கேள்வி பதில் போட்டியில் முதலாம் பரிசாக உம்ராஹ் யாத்திரை

editor

இலங்கைக்கான சீன தூதுவர் நியமனம்