எமது மட்டக்களப்பின் எமது கட்சியினை எரிந்த உள்ளூராட்சி தவிசாளர்களை அச்சுறுத்தும் NPP அரசின் அமைச்சர்களும் அமைப்பாளர்களும்.
நடவடிக்கை எடுக்க கோரி கொடுபட்ட மனு பாராபட்சமாக காணப்படுகின்றது என்றும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 23.09.2025 . தேசிய கட்டிட ஆராட்ச்சி நிறுவகம் எனும் புதிய சட்டமூலம் ஒன்றினை தேசிய மக்கள் சக்தி அரசால் முன்வைக்கப்படுள்ளது .
இந்த சட்டத்தின் மூலம், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் மண் சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த கட்டிடங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட அனர்த்தங்களின் போது முன்னதாக இயங்கிய கட்டமைப்பை ஒரு சட்டபூர்வ நிறுவனமாக மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இது, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சீரமைப்பதற்கான முயற்சியாகும்.
ஆனால் சில பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளன.
அமைக்கப்படாத இடங்களில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மூலம், இந்த பிரதேசங்களில் கட்டிடங்கள் மற்றும் வீதிகள் அமைக்கப்பட வேண்டும்.
இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் இடங்களில் கட்டடங்களை அமைப்பதற்கான திட்டங்கள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தால், அது மேலும் பயனுள்ளதாக இருக்கும். சட்டவிரோதமான மண் அனுமதிகள், மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகளை ஏற்ப்படுத்தும் கனிய வள அகழ்வுகள், வள சுரண்டல்கள் தொடர்பான விடையங்களுக்கும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திருக்கோவில் மற்றும் வாகை போன்ற இடங்களில் இவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டதால் பல அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. கடந்த செப்டெம்பர் 21ஆம் தேதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் இன்று ஒரு வருடத்தை நிறைவு செய்கிறார்.
ஆனால், இந்த ஒரு வருடத்தில் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வுகள் வழங்கப்படவில்லை.
யாராவது “நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டால் பதிலளிக்க முடியாத நிலை உள்ளது.
அதனால், அவசரமாக யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். ஆனால் உங்கள் காலப்பகுதியில் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வுகள் இன்னும் இல்லை.
தீர்வுகள் உடனடியாக கிடைக்காது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
ஆனால், அரசாங்கம் தீர்வுகளுக்கான திட்டமிடல் மற்றும் அதற்கான உந்துதலை காட்ட வேண்டும்.
வடகிழக்கு பிரதேசங்களில் காணி உரிமை மற்றும் மேச்சத்தரைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் நிலவுகின்றன. மயிலத்தமடு மாதவனை போன்ற இடங்களில் மாவலி அதிகாரசபையின் கீழ் இன்றளவிலும் காணிகள் உள்ளன.
730 நாட்கள் கடந்தும் மேச்சத்தரையை அறிவிக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதற்கான தீர்வுகள் இன்னும் வழங்கப்படவில்லை.
அதேபோல், வனத்துறையின் கீழ் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
மூன்று மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் 2025 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சட்டமூலங்களை முன்மொழிகின்றனர்.
ஆனால், கடந்த ஆட்சி “நாங்கள் செய்ய மாட்டோம்” என்று நேரடியாக கூறியது.
தற்போதைய அரசாங்கம், இனவாதத்தை மதிப்பதாக கூறி, ஆனால் செயல்பாடுகளில் அதற்கேற்ப நடந்து கொள்ளவில்லை.