வகைப்படுத்தப்படாத

தமிழ் மக்களின் தியாகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வே வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாா்

 

(UDHAYAM, COLOMBO) – தமிழ் மக்கள் தாங்கள் இழந்த இழப்புக்களுக்கும், செய்த தியாகத்திற்கும் நிகரான நியாயமான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனா். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்

நேற்று (02) கிளிநொச்சி உதயநகா்  பிரதேசத்தில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.  அங்கு மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்கள் எதற்காக தியாகங்களை செய்தார்களோ எதற்காக இழப்புக்களைச் சந்தித்தாா்களோ, அதற்கான நியாயமான தீர்வு கிடைக்க வேணடும். அதற்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை  பெற்றவா்கள்  கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையான உழைப்பின் மூலம் மக்களின் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்கலாம் என்பது  யாதார்த்தம். மாறாக புறக் காரணிகளை கூறிக்கொண்டிருப்பவா்கள்  இயலாமையுடையவா்களே எனத் தெரிவித்த அவா்

போராட்டக் காலத்தில் எந்த தியாகத்தையும்  செய்யாதவா்கள் இப்போது  அதன் வலிகளை அதிகம் சுமந்தவா்கள் போல் பேசி வருகின்றாா்கள், அத்தோடு பாராளுமன்றத்திலும்  அடிக்கடி ஊடகங்களில் செய்தி வரும் வகையில்  பேசுகின்றாா்கள் ஆனால் இவையெல்லாம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விடாது. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அா்ப்பணமாக உழைக்க வேண்டும். அதற்காகவே மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றாா்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகள் எவையும்  நிவர்த்தி செய்யப்படுவதாக தெரியவில்லை  தற்போதைய சூழ்நிலையில் மக்கள் கைவிடப்பட்டவா்களாக நிர்க்கதியான நிலையில் காணப்படுகின்றனா் எனவும் தொிவித்தாா்

மேலும் இன்று  புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக  மாற்றத்தை நோக்கி தாங்களாகவே இளைஞர்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இளைஞர்களின் சகதி என்பது மிகவும் பலமானது. அவா்கள் ஒரு நோக்கத்திற்காக ஒன்று சேரும் அது இலகுவில் அடையப்படுகிறது. எனவே இளைஞர் சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றம் சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றமாகவே காணப்படும். அந்த வகையில் அந்த மாற்றத்திற்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம் எனவும் குறிப்பிட்டாா்.

இச் சந்திப்பில்  சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்களான அன்ரன் அன்பழகன், தணிகாசலம், மற்றும் இளைஞர்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

எஸ்.என்.நிபோஜன்

Related posts

இரண்டாயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை

Libya migrants: UN says attack could be war crime

Ginigathhena landslide Tragedy: Body of missing shop owner recovered