உள்நாடு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த விசேட ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அனுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய பகுதிகளுக்கு விசேட ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தாண்டு நிறைவடைந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இலங்கை போக்குவரத்து சபை 9 ஆம் திகதி முதல் மேலதிகமாக 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி செயலகப் பணிகள் வழமைக்கு

தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்

editor

பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பணி நீக்கம் செய்யப்பட பராமரிப்புத்துறைஉதவிப் பணியாளர்!