உலகம்உள்நாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய இராச்சியத்தின் “தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம்” தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான இந்த ஆணையம், பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றமாகும்

Related posts

இன்று கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு

யாழ் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

மேலும் 22 பேர் குணமடைந்தனர்