வகைப்படுத்தப்படாத

தமிழகத்தில் ஈழ அகதியொருவர் தற்கொலை?

(UDHAYAM, COLOMBO) – தமிழகத்தில் ஈழ அகதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கரூர் – ராயனூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 21 வயதான அந்தோனிராஜ் ஜோன்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் இருந்த அவர், சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என காவற்துறையினரை மேற்கோள்காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

UAE offers 100% foreign ownership in 122 economic activities

සඳ මත පා තබා වසර පනහයි

DIG Hector Dharmasiri sentenced to 3-years in prison