வகைப்படுத்தப்படாத

தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி த ஹிந்து ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தற்போது இலங்கையில் 85 கடற்றொழிலாளர்கள் தடுப்பில் உள்ளனர்.

அவர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது

அதேநேரம் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts

Army Commander before PSC

ரஷ்ய புற்றுநோய் மருந்த தரம் தொடர்பில் பிரச்சினை எழவில்லை – சுகாதார அமைச்சு

சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்