வகைப்படுத்தப்படாத

தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய கடற்பரப்பில் தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் தமிழக கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

கடந்த வாரம் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகித்தில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்துக்கு நியாயம் கோரி முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டதுடன், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரது இறுதி கிரிகை ஒருவாரத்துக்குப் பின்னர் நேற்று நடைபெற்றது.

கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான ஒழுங்கு குறித்து உறுதியளிக்கப்பட்டிருந்தது.

Related posts

பாகிஸ்தான் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் விஜயம்

30-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை…

தென் ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வர்த்தகர் 137 நாட்களுக்கு பிறகு விடுதலை