அரசியல்உள்நாடு

தபால் மூலம் வாக்களிக்க 700,000 பேர் விண்ணப்பம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த 17 ஆம் திகதி நிறைவடைந்தது.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்கான அரசு அதிகாரிகள் குறித்த தகவல் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, எந்தவொரு அரச அதிகாரியும் இன்று வரை தங்கள் தகவல்களை வழங்கவில்லை என்றால், அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்கு, அவர்களின் நிறுவனத் தலைவரின் பரிந்துரைகளுடன் அனுப்புமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார்.

Related posts

வடபகுதி சுற்றுலாத்தலங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்படுகிறது – அலஸ்ரின் குற்றச்சாட்டு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது டெங்கு நோய் தோற்று