உள்நாடு

தபால் பரிவர்த்தனை நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) –   மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தை அடுத்த வாரமளவில் மீளவும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அலுவலக பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு மத்திய தபால் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அலுவலகப் பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தபால் சேவையூடாக மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க

2026 நடுப்பகுதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – உதய கம்மன்பில

editor

இன்று முதல் தட்டம்மைக்கு தடுப்பூசி!