உள்நாடு

தபால் திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் – 70 மில்லியன் ரூபா நஷ்டம்!

தபால் திணைக்கள ஊழியர்களின் அண்மைய வேலைநிறுத்தத்தால் தபால் துறைக்கு சுமார் 70 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார கூறுகிறார்.

ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் 30 முதல் 35 மில்லியன் ரூபா வருவாய் இழப்பு ஏற்படுகிறது, மேலும் வேலைநிறுத்தம் காரணமாக குவியும் கடமைகள் இரண்டு முதல் மூன்று நாட்கள் க மேலதிபமாக எடுத்துக் கொள்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வேலைநிறுத்தங்கள் தபால் துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகவும் அவர்கள் தங்கள் கடமைகளைப் பூர்த்தி செய்ய மாற்று நிறுவனங்களை நாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

பல அமைச்சர்களுக்கு புதிய பொறுப்புகள்

மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர் கைது – இலங்கையில் சம்பவம்

editor

இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படும்