உள்நாடு

தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு 100% சேவையாற்றவில்லை

(UTV|கொழும்பு) –  ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாட்களை கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்தி கொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள், இராணுவ பிரசன்னம், ஜெனீவா தீர்மானம், அரசியல் கைதிகள், பட்டதாரிகள் விவகாரம், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, நேற்று(05) பதிலளித்தார்.

ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

நாளை முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்த்தப்படுகிறது

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்

கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு SLPP ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை