உள்நாடு

தனியார் பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – பல தனியார் பேருந்து சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகியுள்ளன.

நாடு முழுவதும் உள்ள QR குறியீடு முறையினால் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்று குற்றம் சாட்டுகிறது.

எரிபொருள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

பல பேரூந்து தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து பேரூந்துகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று அதிகபட்ச பேரூந்துகள் பயன்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

Related posts

முட்டை விலை குறைந்தது!

editor

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – பல்கலைகழக விரிவுரையாளர் பலி

editor