உள்நாடு

தனியார் பஸ்களில் இனிமேல் CCTV கேமரா அவசியம் – வீதி அனுமதி பத்திரம் வழங்குவதற்கு முன் பரிசீலனை

தனியார் பஸ்களில் இனி CCTV பாதுகாப்பு கேமரா இருந்தால் மட்டுமே அந்த பஸ்களுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது வீதி அனுமதி பத்திரங்களைப் பெறும்போது பஸ் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன.

இதில் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்துவது அடங்கவில்லை. எனினும், இதுவும் அந்த நிபந்தனைகளின் தொகுப்பில் விரைவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பொதுப் போக்குவரத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக நீண்ட கால வேலைத்திட்டமொன்றும் அவசியமாகும். பொதுப் போக்குவரத்தைப் பெண்களுக்கான பொது இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, தனியார் பஸ்களில் CCTV கேமராக்கல் இருப்பது, அந்த பஸ்களில் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதோடு, அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என அவர் தெரிவித்தார்.

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

editor

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)