உள்நாடு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய மேலும் 965 பேர் கைது

(UTV | கொழும்பு) –  இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 965 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 73,078ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், உரிய அனுமதியின்றி 197 வாகனங்களில் பயணித்த 308 பேர், மேல் மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

Related posts

பண்டாரவளை மாநகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்

editor

ஓய்வு வயதை அறிவித்த சுமந்திரன்!

அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது