உள்நாடு

தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 344 : 05 [COVID UPDATE]

‘தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ – நாமல்

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது

editor