உள்நாடு

தந்தையின் மறைவையடுத்து நாடு திரும்பினார் இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே

தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் இன்று காலை 08.25 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-392 மூலம் அபுதாபியிலிருந்து நாட்டை வந்தடைந்தார்.

அவருடன் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவரும் நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் மிக விரைவாக விமான நிலையத்திலிருந்து வெளியேறிதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

துனித் வெல்லாலகேவின் தந்தை திடீர் மாரடைப்பால் நேற்று (18) இரவு உயிரிழந்த அதேநேரம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துனித் விளையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு!

மின் தொடர்பில் இன்று மீளவும் பரிசீலனை

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது