கிசு கிசு

தந்தை பெயரில் அரசியல் பொழப்பு வேணாமாம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் அடிக்கடி “என்றும் எனது அன்புக்குரிய தந்தை” எனக் கூறி முன்னாள் அரச தலைவர் ரணசிங்க பிரேமதாசவை நினைவு கூறுவதுண்டு. ஐக்கிய மக்கள் சக்தி மாற்று சக்தியாக மாற வேண்டுமாயின் சஜித் பிரேமதாச தனது தந்தையின் பெயரை மீண்டும் நினைவுபடுத்தக் கூடாது என சரத் பொன்சேகா ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

பதுளையில் வைத்து சஜித் பிரேமதாசவிடம் அவர், இதனை நேரடையாக கூறியதாகவும், அந்த பழைய பெயர்களால் தற்போது பயனில்லை என தான் சஜித் பிரேமதாசவுக்கு நினைவூட்டியதாகவும் பொன்சேகா தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி புதிய பயணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமாயின் பழைய விடயங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பது பொன்சேகாவின் நிலைப்பாடாக உள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட கீழ் மட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் தற்போது ரணசிங்க பிரேமதாச மீது மரியாதையும் மதிப்பும் கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயம் என அரசியல் அவதானிகள் கட்டம் போட்டு தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா : அதிக ஆபத்தான பிரதேசங்கள் அரசினால் அறிவிப்பு

வெளிநாட்டில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை

PANDORA PAPERS : இரகசியங்களை வெளியிடும் ரஞ்சன்