வகைப்படுத்தப்படாத

தடைசெய்யப்பட்ட க்ளேபோசேட் இரசாயணம் மீண்டும்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் விவசாய பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்டுள்ள க்ளேபோசேட் இரசாயணத்தை தேயிலை பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டிற்கு மாத்திரம் க்ளேபோசேட் இரசாயண பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

க்ளேபோசேட் இரசாயண பயன்பாடு தடைசெய்யப்பட்டதன் பின்னர் தேயிலை உற்பத்தித் துறையில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் க்ளேபொஸ்பேட் பயன்பாடு என்பது மக்களின் ஆரோக்கியத்தை மேலும் சவாலுக்கு உட்படுத்துவதாக அத்துரலியே ரத்தன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

How to get UAE tourist visa fee waiver for kids

ஷனில் நெத்திகுமாரவுக்கு பிணை

மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்