உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

(UTV|கொழும்பு)- மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று(18) மதியம் ஒரு மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் ஆங்கில மொழியிலான இருவெட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான மொழிபெயர்ப்புகள் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

இது தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில சமர்ப்பிக்கவுள்ளது.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ரஞ்சித் அலுவிஹாரே

editor

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்

வேலையற்ற பட்டதாரிகளுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் – சஜித் பிரேமதாச

editor