ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேகநபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் விசாகா ஐராங்கனி வீரகோன் என்ற பெண் சந்தேகநபர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திரகரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேக நபரை 250,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 2.5 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்தில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.