உள்நாடு

ட்ரோன் கமராக்கள் கண்காணிப்புக்களை தொடங்கியது

(UTV | கொழும்பு) – வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியினை இன்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ட்ரோன் கமராப் பிரிவு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது, வீதிச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் நோக்கமாகும்.

காலி வீதி, பாராளுமன்ற வீதி, கண்டி – நீர்கொழும்பு வீதிகள் ஆகிய இடங்களை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ட்ரோன் கமராக்கள் 5 இடங்களில் இருந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ள இருக்கின்றன என்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

Related posts

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

‘மத்திய வங்கியின் தீர்மானங்களில் தலையிடப் போவதில்லை’

எகிறும் ஒமிக்ரோன்