உலகம்

ட்ரம்ப் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

(UTV |  அமெரிக்கா) – உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2 ஆம் திகதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, கடந்த 3 ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய இராணுவ வைத்தியசாலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபின் அவர் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தை எடுத்து வந்தார். இதையடுத்து, அவரது உடல்நிலை சீரடைந்தது.

இந்நிலையில், 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த வால்டர் ரேட் இராணுவ வைத்தியசாலையில் இருந்து டொனால்ட் டிரம்ப் இன்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

இதையடுத்து, அவர் வெள்ளை மாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பாலஸ்தீன ஆண்களை நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ள இஸ்ரேல் இராணுவத்தினர்!

காசாவில் உக்கிர தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

இந்தியாவில் “தக்காளி காய்ச்சல்”