வகைப்படுத்தப்படாத

ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் இராஜினாமா

(UTVNEWS | COLOMBO) – அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அமரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில் டிரம்ப் தெரிவிக்கையில்; “3½ ஆண்டுகளாக சிறப்பான பணிக்கு பிறகு, சாரா சாண்டர்ஸ் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். சாரா அற்புதமான திறமைகளுடன் கூடிய மிக சிறப்பான நபர். அவர் சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். நன்றி சாரா” என தெரிவித்திருந்தார்.

Related posts

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்ய பிடியாணை

மேற்கு லண்டன் – தீ விபத்து

A police operation to nab Beliatta chairman