வகைப்படுத்தப்படாத

டோரியன் சூறாவளி – ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு

(UTVNEWS|COLOMBO) – பஹாமாஸ் தீவுகளை பதம் பார்த்த டோரியன் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட
மக்களின் அடிப்படை வசதிகளில் பாரிய தட்டுப்பாடுகள் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பஹாமாஸ் தீவுகளை பதம் பார்த்த டோரியன் சூறாவளியினால் சுமார் 13 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் என்பன தெரிவித்துள்ளன.

சுமார் 60000 மக்களுக்கு உணவு வசதிகள் சரியான முறையில் இல்லை எனவும் 62000 மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை எனவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதவேளை பஹாமாஸ் தீவுகளின் துறைமுகங்கள் மற்றும் பாரிய தொழிற்சாலைகள் என்பனவும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார சிக்கல்களை எதிர்வரும் நாட்களில் எதிர்நோக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பஹாமாஸ் தீவுகளை பதம் பார்த்த இந்த டோரியன் சூறாவளி மணிக்கு சுமார் 295 கிலோ மீட்டர் தூரத்தில் வீசியுள்ளது. இதவேளை தற்பொழுது இந்த சூறாவளி நகர்ந்து வரும் நிலையில் அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தை மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் தாக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Ship donated by China arrives in Colombo

විදේශීය මත්පැන් බෝතල් 50ක් සමඟ සැකකරුවෙකු අත්අඩංගුවට

இன்று உலக ரேடியோ தினம் 2018