கிசு கிசுவிளையாட்டு

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமுக்கு, பேசியபடி காரை ஓட்டிய குற்றத்துக்காக,  ஆறு மாதங்களுக்கு கார் ஓட்டக்கூடாது என,  லண்டன் நகர நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு 750 பவுண்ட் (இந்திய மதிப்பில் 69 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 – ஆம் திகதி, மேற்கு லண்டனில் உள்ள பிரபல போர்லேண்ட் சாலையில், டேவிட் பெக்காம் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது மொபைல்ஃபோனில் பேசியபடி அவர் காரை ஓட்டியதாக தெரிகிறது.

மேற்படி இதனை அந்த வீதியில் சென்ற நபர் ஒருவர் புகைப்படம் பிடித்துள்ளார். அதனையே ஆதாரமாகக் கொண்டு, பெக்காமுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் நீதிமன்றம் இன்று இப்படியொரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

Related posts

டி20 உலகக் கிண்ணம் – ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

கிரிக்கெட் போட்டியில் செல்பி எடுத்துக் கொள்வதற்கு தடை

2019 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு