விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் முதல் இருபதுக்குள் இருவர்

(UTV | துபாய்) – ஐ.சி.சி., டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் அவுஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் (911), முதலிடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (911), இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி (886) ஆகியோர் முதலிரண்டு இடத்தில் நீடிக்கின்றனர்.

இந்நிலையில் முதல் 10 தர வரிசையில் இலங்கை வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை. அதனைத் தொடர்ந்து 14 வது இடத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்னவும் 17 வது இடத்தில் ஏஞ்சலோ மேத்யூஸும் இடம்பிடித்துள்ளனர்.

Related posts

இங்கிலாந்து அணி வந்திறங்கியது [VIDEO]

ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்