விளையாட்டு

டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

(UTV | துபாய்) – 2020 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்துவீசிய ஐதராபாத் அணியின் ரஷித் கான் 4 ஓவர்களை வீசி 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஷ்குமார் 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

Related posts

லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற மொஹம்மெட் பைனாஸ் யார்?

டெஸ்ட் பந்து வீச்சாளர் தரிவரிசை பட்டியலில் அஸ்வின் முன்னேற்றம்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகள்