உலகம்

டெல்லி வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|இந்தியா )-குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.

ஜாஃபராபாத் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே “வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியில் இன்று பாடசாலை மூடப்பட்டிருக்கும் எனவும் எல்லா மாநிலத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விமானத்தில் கரப்பான் பூச்சிகள் – மன்னிப்பு கோரிய ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்

editor

பதவி ஏற்ற ஒரு வாரத்தினுள் பிரதமர் இராஜினாமா

நியூசிலாந்து பிரதமரின் திருமணம் ஒத்திவைப்பு