உள்நாடு

டெலிகிராம் ஊடாக பண மோசடி – 31 வயதுடைய நபர் கைது

இணையத்தளம் ஊடாக பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவு கைது செய்துள்ளது.

இணையத்தளம் ஊடாக பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, மோசடியான முறையில் வங்கிக் கணக்கொன்றில் பணத்தை வைப்புச் செய்தமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முறைப்பாட்டாளரை ஏமாற்றி ‘டெலிகிராம்’ (Telegram) குழுவொன்றில் இணைத்துக்கொண்டு 6,860,000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட பணத்தில் 500,000 ரூபாவை சந்தேகநபர் தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் 31 வயதுடைய வெலிப்பென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Related posts

முஸ்லிம் காங்கிரசின் மனு திங்கள் விசாரணைக்கு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

🚨 ஈரான் ஜனாதிபதி மரணம்! ஜனாதிபதியாக முக்பர்