உள்நாடு

டெடி பியர் பொம்மைகளுக்குள் மறைத்து கொண்டு வந்த கொகெய்ன் போதைப்பொருள் – வெளிநாட்டுப் பிரஜை கைது

இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, இந்த போதைப்பொருளை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலிய பிரஜையாவார்.

சந்தேக நபர் இந்த போதைப்பொருளை மூன்று டெடி பியர் (Teddy Bear) பொம்மைகளுக்குள் மறைத்து கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி – மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்

editor

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய முன்னாள் DIGக்கு 04 வருட கடூழிய சிறை

editor