உள்நாடு

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

(UTV|COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கென புதிய பக்டீரியாவொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ‘வோல்பாச்சியா’ (Wolbachia) எனப்படும் பக்டீரியாவை சுற்றுச்சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பை சூழவுள்ள 25 கிராம சேவகர் பிரிவுகளில் பக்டீரியா விடுவிக்கப்படும். குறித்த வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிகவடன தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை பெண்களுக்கு இலவசமாக ஜப்பானில் வேலை வாய்ப்பு

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த மீதான தடை நீடிப்பு

ரணில் தோற்றால் முழு நாடும் தோல்வியடையும் – மீண்டும் வரிசை உருவாகும் – ராமேஷ்வரன் எம்.பி

editor