வகைப்படுத்தப்படாத

டெங்கு சிகிச்கைகள் முறையாக இடம்பெறுவதனால் குறைவடைந்துள்ள உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் டெங்கு நுளம்புகளின் அடர்த்தி, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை என்பனவற்றை எதிர்வரும் நான்கு வாரங்களுக்குள்  [ஒரு மாதம்] 50 சதவீதத்தால் குறைப்பதற்கான திட்டத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் தயாரித்துள்ளார்கள்.

இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு மருத்துவ நிபுணர்கள் உலக வங்கியின் பரிந்துரைக்கு அமைய இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்கள்.

நாடு முழுவதும் பயணித்ததன் பின்னர் அவர்கள் இந்த அறிக்கையை தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் இன்று அமைச்சரவைக்கும் விளக்கம் அளித்துள்ளார்கள்.

இலங்கையில் டெங்கு நோய் பரவலை தொடர்ந்து வைத்தியசாலை சிகிச்சை சேவை முறையான விதத்தில் இடம்பெற்றுள்ளதால், மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை சிறந்த முன்னேற்றமாகும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

பியசேன கமகே சட்ட ஒழுங்கு ராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

Hearing of FR petitions against Hemasiri and Pujith postponed