சூடான செய்திகள் 1

டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 000க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள், தாமதமாக சிகிச்சைகளைப் பெறுவதே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.

Related posts

பஸ் பயணக்கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறையும் வாய்ப்பு

வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – திகதி அறிவிப்பு

editor

இலங்கையில் பரவிவரும் ஆபத்தான நோய்