உலகம்

டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹனா சூறாவளி

(UTV|அமெரிக்கா) – அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஹன்னா சூறாவளி தாக்கியுள்ளது.

அட்லாண்டிக் கடலில் உருவான இந்த புயல், தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று மாலை தாக்கியது. அதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளில் கடும் சூறாவளி காற்றுடன் கடும் மழை பெய்து வருவதுடன் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மணித்தியாலத்திற்கு 145 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசிய பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹனா சூறாவளியினால் 32 பகுதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்

இஸ்தான்புல் நகரை பதம்பார்த்த குண்டுத்தாக்குதல்

நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த சுற்றுலாப் பயணி.