உலகம்

டுபாயில் இந்திய போர் விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாய் ஏர்ஷோவின் (Dubai Airshow) இறுதி நாள் சாகச நிகழ்ச்சியின் போது, வானில் பறந்து கொண்டிருந்த போர் விமானம் ஒன்று சடுதியாக விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியுள்ளது.

விபத்துக்குள்ளானது இந்தியாவின் ‘தேஜஸ்’ (Tejas) வகை போர் விமானம் என உறுதிப்படுத்தப்பட்டதுடன் அந்த விமானி உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் நடந்த உடனேயே மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இதன் காரணமாக விமான சாகச நிகழ்ச்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி கண்காட்சி கூடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Related posts

இரு நாட்டின் உறவு முக்கியமானது – சீனா

நியூஸிலாந்தில் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு

சீனாவின் முன்னாள் அமைச்சர் மரண தண்டனையிலிருந்து தப்பினார்

editor