சூடான செய்திகள் 1வணிகம்

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

(UTVNEWS|COLOMBO) – 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம 2020 மே மாதம் 31ஆம திகதி வரையில டீசல் மற்றும் ஜெட் ஏ-1 ஐ இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, குறித்த 8 மாத காலப்பகுதிக்குள் 1.04 மில்லியன் டீசல் பீப்பாய்களையும் 1.28 மில்லியன் ஜெட் ஏ-1 பீப்பாய்களையும் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஐக்கிய அரபு எமிரேட் இராஜ்யத்தின் M/s Mena Energy DMCC என்ற நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் ,சக்யா உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர் கௌரவிப்பு விழா

மாணவர்களில் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!

editor