உள்நாடு

 டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து

(UTV | கொழும்பு) –  டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து

பேராதனை சரசவி உயன எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து மஹியங்கனை இ.போ.ச டிப்போவுக்கு 6600 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த விபத்தின் போது, பௌசரிலிருந்த 4000 லீற்றர் டீசல் வெளியேறியுள்ளதுடன், எஞ்சியுள்ள 2600 லீற்றர் டீசல் மீண்டும் பேராதனை எரிபொருள் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பௌசரின் சாரதி மற்றும் உதவியாள் ஆகியோர் காயமடைந்து உடதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உடதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் அரச வாகனம் ? நாமல் மீது விசாரணைகள் ஆரம்பம்

editor

தட்டுப்பாடு இன்றி முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க நடவடிக்கை

editor

லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை