உள்நாடுபிராந்தியம்

டிப்பருடன் பஸ் மோதி கோர விபத்து!

கொழும்பு-கண்டி வீதியில் தித்வெல மங்கட பகுதியில் டிப்பர் லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் ஒரு பிக்குவும், பஸ் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கோவிட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுராதபுரம் டிப்போவைச் சேர்ந்த இந்தப் பஸ், அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது, கண்டி நோக்கிச் சென்ற டிப்பர் லொறியுடன் மோதியது.

பஸ் வீதியை விட்டு விலகி ஒரு கடை அருகே நின்றுவிட்டது.

பஸ் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தங்கோவிட பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு

editor

கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

editor