சூடான செய்திகள் 1

ஞானசார தேரரின் மனு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டில் 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை எதிர்வரும் மாதம் 05ம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று(28) தீர்மானித்துள்ளது.

குறித்த மனு மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இன்றைய தினம் நீதியரசர்கள் குழாம் சரியாக ஒழுங்கமைக்கப்படாமையால் மனுவை ஒக்டோபர் 05ம் திகதி வரை பிற்போடுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு மங்கள கடிதம்

நாமல் குமாரவிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம்…