சூடான செய்திகள் 1

ஜோன்ஸ்டன் பெனான்டோவுக்கு எதிரான 4 வழக்குகளும் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) தமது சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனான்டோவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவினால் தொடுக்கப்பட்டுள்ள 4 வழக்குகளும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(05) உத்தரவிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரையில் தமது சொத்து விபரங்கள் குறித்து அவர் வெளியிடாமை தொடர்பிலேயே குறித்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

திடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது

நிதி மோசடி செய்து சிக்கிய போலி வைத்தியர்